எனக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்: கீர்த்தி சுரேஷின் வைரல் பதிவு

keerthysuresh instagiram nyke
By Irumporai Sep 04, 2021 10:34 AM GMT
Report

தனக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான் என கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது ரஜினி முருகன்தான்.

அதனை தொடர்ந்து ரெமோ படத்தில் நடித்தன் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் முன்னர் கிடைத்த வரவேற்பு இப்போது இல்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

அதே சமயம் இன்ஸ்டகிராமில் எப்போதும் அப்டெட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டகிராம் பதிவில் கீர்த்தி சுரேஷ் தனது வளர்ப்பு நாயின் 3வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

மேலும் தனது பதிவில் எனது மகனுக்கு இன்று 3 வயது. எல்லோரும் நாய்கள் உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கும் என்று சொல்வார்கள். அதை இந்த மூன்றாண்டுகளில் நான் நன்றாகவே உணர்ந்துவிட்டேன். நைக் ( தனது நாய்} உன்னுடைய குட்டி இதயம், தாங்க முடியாத அளவுக்கு அன்பைச் சுமக்கிறது. வீட்டுக்கு யார் வந்தாலும் உன்னால் கவரப்படுகின்றனர்.

எனக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்: கீர்த்தி சுரேஷின் வைரல் பதிவு | Keerthy Suresh S Birthday Friend Nyke

நீ இங்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எனக்கு நீ இன்னமும் ஒரு பப்பிதான் நைக். இன்று மட்டுமல்ல என்றுமே நீ பப்பிதான் நைக் " என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் கீர்த்திசுரேஷின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.