நான் அவர் பொண்டாட்டிங்கிற மாதிரி பேசினாரு - கடுப்பில் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh
By Sumathi Jun 23, 2023 05:30 PM GMT
Report

தன்னுடைய ரசிகர்கள் செய்த சில சம்பவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுகுறித்த புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில்,

நான் அவர் பொண்டாட்டிங்கிற மாதிரி பேசினாரு - கடுப்பில் கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Reveals About Marriage Proposal

சமீபத்தில் கூட என்னுடைய நண்பர் ஒருவருடன் போட்டோ போட்டிருந்தேன், அவரை தான் கல்யாணம் பண்ண போறேன்னு கிளப்பி விட்டுட்டாங்க. பாவம் அவனோட லவ்வர் டென்ஷன் ஆகிட்டா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒருத்தர் என் வீடு தேடியே வந்துட்டார். வீட்ல வேலை செய்றவங்க தான் இருந்தாங்க.

திருமண புரபோசல்

அவ ஏன் இந்த படம்லாம் பண்றானு பேசிருக்காரு. நான் ஏதோ அவர் பொண்டாட்டிங்கிற மாதிரியே பேசிருக்காரு. அதே ஆளு சென்னையில என் வீட்ல வேலை செய்யுறவங்க கிட்ட பேசும்போது எதுக்கு உதயநிதி கூடலாம் படம் பண்றானு கேட்டாராம். அப்புறம் உதயநிதி கிட்டயே இதை சொன்னேன்.

நான் அவர் பொண்டாட்டிங்கிற மாதிரி பேசினாரு - கடுப்பில் கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Reveals About Marriage Proposal

பாட்டி இருக்கும்போது ஒரு அம்மா, அவரது பையனோடு வந்திருக்காங்க. அப்போ என் பாட்டி தான் அவங்கள கூப்பிட்டு உக்கார வச்சு பேசிட்டு, என் அம்மாவை வர சொல்லிருக்காங்க. என் அம்மா வந்ததும் அவர்கள் கல்யாணம் பற்றி பேசினாங்களாம்.

இதையெல்லாம் கேட்டப்போ, டேய் யார்ரா நீனு தோணுச்சு. இந்த மாதிரி விஷயமெல்லாம் அவ்வப்போது நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.