அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் - கீர்த்தி சுரேஷ் பளீச்!
அனிருத்துடன் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
அனிருத்துடன் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையாமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து, தமிழ் சினிமாவில் அவர் கொடுத்த பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிருத்தின் இசை மிகப்பெரிய பாராட்டுக்கு உரித்தானது. மேலும், ஜவான் படத்தின்மூலம் ஹிந்தி திரையுலகிலும் காலடி பதித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் பதில்
தற்போது, இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படம், அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ என பிடியாகவே வலம் வருகிறார். இந்நிலையில், இவரும் கீர்த்தி சுரேஷூம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இதற்கு பதிலளித்துள்ள கீர்த்தி சுரேஷ், “ அது தவறான செய்தி.. அனிருத் எனக்கு நல்ல நண்பர் எனவும், திருமணம் குறித்த கேள்விக்கு நடக்கும். எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.