சிம்புவிடம் காதலை சொன்னாரா கீர்த்தி சுரேஷ் - என்ன நடந்தது?
மாநாடு படத்தை பாராட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.பெரும் சிரமங்களுக்கிடையே நடிகர் சிம்பு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Thank you @KeerthyOfficial ??❤️ https://t.co/dTU9dSMMDI
— Silambarasan TR (@SilambarasanTR_) December 2, 2021
இந்நிலையில் மாநாடு படத்திற்கு வரும் நல்ல விமர்சனங்களை பார்த்து சந்தோஷமாக இருப்பதாகவும், அருமையான படத்தை கொடுத்த மொத்த படக்குழுவுக்கும் குடோஸ் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சிம்பு நன்றி தெரிவிக்க, பதிலை பார்த்த கீர்த்தியோ ஒரு ஹார்டினை தட்டிவிட்டார். ஏதோ சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ் அப்படி செய்தார்.ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் சிம்புவிடம் லவ் சொல்லிட்டாங்க கீர்த்தி என கருத்துகளை பதிவிட்டனர்.
மேலும் சிலர் உங்களின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக போடுங்கள் என சிம்புவுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.மாநாடு பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷன் கீர்த்தியின் நெருங்கிய தோழி ஆவார். அந்த பாசத்தில் கீர்த்தி ட்வீட் செய்ய இப்படி நடந்திருக்கிறது என்பதே உண்மை...!