டிசம்பரில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா - பரவும் தகவல்!

Keerthy Suresh Gossip Today Marriage
By Sumathi Nov 16, 2024 03:00 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthy suresh

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

வெளியுலகிற்கு தலைகாட்டாத நடிகை சுவலட்சுமி - தற்போதைய நிலை என்ன தெரியுமா?

வெளியுலகிற்கு தலைகாட்டாத நடிகை சுவலட்சுமி - தற்போதைய நிலை என்ன தெரியுமா?

திருமண தகவல்

இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் அனிருத் உடன் கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. தொடர்ந்து ர்த்தி சுரேஷின் தந்தை அது தவறான செய்தி என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டிசம்பரில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா - பரவும் தகவல்! | Keerthy Suresh Marriage December Details Viral

தற்போது கீர்த்தி சுரேஷ் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கோவாவில் இந்த திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.