என் மனைவிக்கு பிறகு கவர்ச்சிகரமான நடிகை கீர்த்தி சுரேஷ் தான் - பிரபல தயாரிப்பாளர் பேச்சு..!
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் போனி கபூர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.மற்ற மொழி படங்களில் நடிப்பதில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட விமர்சனங்கள் வாயிலாக ரீதியாக அழுத்தமான அரசியலை முன் வைத்து வருகிறார்.
இவரின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் உதயநிதியின் கடைசி படமாகும். மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் வடிவேலுவின் முக்கியமான படமாக கருதப்படுகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
போனி கபூர் பரபரப்பு பேச்சு
மாமன்னன் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது.
இவ்விழாவில் படக்குழுவினருடன் கமல், வெற்றிமாறன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதான், எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன், கே.எஸ் ரவிகுமார், விஜய் ஆண்டனி, கவின், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் போனி கபூர் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், என்னை பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார்.
இந்த விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட் பொதுவான ஒரு விஷயத்தை பற்றி படத்தில் பேசியுள்ளோம்.
உதயநிதி, வடிவேலுடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. படம் அப்படி இருக்காது.சீரியஸான படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
