திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் : என்ன சொன்னாங்க தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது சமூகவலைத்தளங்களில் தங்களின் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கேள்விகளை கேட்குமாறு தனது ரசிகர்களிடம் கேட்டிருந்தார். அந்த வகையில் ஒரு ரசிகர் கீர்த்தி சுரேஷின் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினார் அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் மீம் புகைப்படத்தை பகிர்ந்து எனக்கே தெரியலை என்பது போல் பதிலளித்தார்.
சமந்தா சிறந்த ஆளுமை
தொடர்ந்து நடிகை சமந்தா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் தனது கேள்வியினை முன்வைத்தார் , அதற்கு பதில் கூறிய கீர்த்தி :
நான் சந்தித்த ஒரு ஆளுமை. நான் சந்தித்த மிகவும் வலுவான நெஞ்சம் கொண்ட நபர்களில் அவரும் ஒருவர். எளிமையாகச் சொன்னால், அவரை யாராலும் தடுக்கவே முடியாது!" என பதில் அளித்தார். கீர்த்தியின் இந்த புகழராத்திற்கு சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"நன்றி மை டார்லிங்" என்று குறிப்பிட்டுள்ளார்