அழகுடா..! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் மஞ்சள் நிற புடவை அணிந்து பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மங்களகரமாக மஞ்சள் புடவை அணிந்து பொங்கல் வைத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் அறிமுகம்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.
பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'தொடரி', சூர்யா ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' , 'சர்கார்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும்.
இவர் கதையின் நாயகியாக நடித்த 'மகாநடி' திரைப்படம் இமாலய வெற்றியை பெற்றது. மகாநடி திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்
தற்போது தமிழில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வரும் மாமன்னன், ஜெயம் ரவியுடன் சைரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரகு தாத்தா மற்றும் ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த வருட பொங்கலை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
மஞ்சள் நிற பட்டுப் புடவையில், ஸ்லீவ் லெஸ் அழகில், மண்பானையில் பொங்கல் வைத்து இந்த பொங்கலை கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Pongaloo Pongal with @TheRoute, my family ???
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 15, 2023
Wishing everyone a Happy Sankranthi!! ♥️#HappyPongal #Pongal2023 pic.twitter.com/7UDt5RQXr1