மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Tamil Cinema
By Thahir 2 மாதங்கள் முன்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்டோ வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுகம் 

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரின் அறிமுக திரைப்படத்தின் மூலம் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் திரையுலகில் அறிமுகம் கிடைத்தது.

இதை தொடர்ந்து தொடரி, ரஜினி முருகன், ரெமோ, உள்ளிட்ட திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

மாடர்ன் உடையில் குத்தாட்டம் 

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நக் அஸ்வின் இயக்கத்தில் மகாநடி படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார்.

இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் 2 தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் மாடர்ன் உடையில் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.