அஜித் படத்தின் தங்கை ரோலில் கீர்த்தி சுரேஷ்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Keerthy Suresh Actor ajith Vedhalam remake
By Petchi Avudaiappan Aug 02, 2021 10:32 AM GMT
Report

 அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் அண்ணாத்த, சாணிக் காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அஜித் படத்தின் தங்கை ரோலில் கீர்த்தி சுரேஷ்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Keerthy Suresh Committed To Vedhalam Remake

இந்நிலையில் கீர்த்தியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் அஜித் தங்கையாக தமிழில் லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.