ஸ்கூல் படிக்கும் போதே..! இந்த பிரபலத்தின் மகனா கீர்த்தி சுரேஷ் காதலர்!!வெளியான தகவல்

Keerthy Suresh Tamil Actress
By Karthick Apr 22, 2024 04:13 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா படத்தில் நடித்து வருகின்றார்.

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து பிஸியான நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வரும் இவருக்கு தற்போது இந்தி பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன.

keerthy-suresh-boyfriend-news

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியான விஜய்யின் "தெறி" படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவனுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதே போல, தமிழில் ரகு தாத்தா படத்திலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthy-suresh-boyfriend-news

மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷின் வயது 31. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என அவ்வப்போது செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

பள்ளி காலத்தில்

கீர்த்தி சுரேஷ் ரகசியமாக ஒருவரை காதலிப்பதாக கூட கூறப்படுகிறது. ஆனால், அவரை குறித்த எந்த தகவலும் இல்லை. தற்போது கூட கேரளாவின் பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகனை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

keerthy-suresh-boyfriend-news

இருவருமே பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் வெளிவரும் செய்திகளே தவிர, இது வரை கீர்த்தி சுரேஷ் அவராகவே விளக்கமோ, அல்லது யாருடனும் இருப்பது போன்ற ஒரு புகைப்படமோ கூட வெளியாகவில்லை என்பது இந்த விவகாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது.