விஜய்யிடமிருந்து சத்தியமா அதை எதிர்பார்க்கல; அது அவசியமே இல்லை - கீர்த்தி சுரேஷ் பளீச்!
விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் அவர் நடித்துள்ள மாமன்னன் படம் மெகா ஹிட்டானது.
ரொம்பவே சந்தோஷம்
இதற்கிடையில், விஜய்யும், கீர்த்தி சுரேஷும் டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் வெளியானது. இன்று வரை இருவரும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷின் ஃபெர்பார்மன்ஸை விஜய் புகழ்ந்து தள்ளியிருப்பார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி, "மகாநதி படத்தை பார்த்த பிறகு அப்போதே எனக்கு ஃபோன் செய்து பாராட்டினார் விஜய். அதையும் தாண்டி அவர் மேடையில் அப்படி சொன்னது ரொம்பவே சந்தோஷம்.
சத்தியமாக நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. அப்படி சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார்" எனத் தெரிவித்துள்ளார்.