இவர்தான் வருங்கால கணவரா? கீர்த்தி சுரேஷ் பளீச் பதில்!
கீர்த்தி சுரேஷ் தன் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில், தனது நீண்ட நான் நண்பரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ஃபர்ஹான் பின் லியாகத் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகி வதந்தி பரவியது.
காதலரா?
அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், இதனை கவனித்த கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய நண்பர் என்றும் அவர் தனது வருங்கால கணவர் இல்லை.
Hahaha!! Didn’t have to pull my dear friend, this time!
— Keerthy Suresh (@KeerthyOfficial) May 22, 2023
I will reveal the actual mystery man whenever I have to ?
Take a chill pill until then!
PS : Not once got it right ? https://t.co/wimFf7hrtU
என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்கள் என பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.