நடிகை கீர்த்தி செட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா - ரசிகர்கள் ஷாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகை கீர்த்தி செட்டி முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தகவல் பரவி வைரலாகி வருகிறது.
நடிகை
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி, இவர், ‘உப்பெனா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களாகவே கீர்த்தி ஷெட்டி முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பேட்டியில்
இதனை தொடர்ந்து அவர் பேட்டியில், " சோஷியல் மீடியாவில் பாசிட்டிவான விமர்சனங்களை பார்க்கவே முடிவதில்லை.
அதற்கு பதிலாக நெகட்டிவிட்டி தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டால் அவர்களுக்கு என்ன ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டும்,
தோற்றத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது எல்லா நடிகர்களும் நடிகைகளும் செய்வது சாதாரண ஒன்று தானே, நான் செய்தால், அவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை" என பேசி ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.