ரஜினியை தொடர்ந்து பிரபல ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

chiranjeevi keerthisuresh
By Petchi Avudaiappan Nov 02, 2021 05:55 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

ரஜினியை தொடர்ந்து பிரபல ஹீரோவான சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழில் அஜித் நடித்து தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தில் ஹீரோவாக சிரஞ்சீவி நடித்து வருகிறார். இப்படத்தில் தமிழில் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

பலவித கேரக்டரில் அசத்தும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.