13 வருஷ காதல்; நடிகை கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் - மாப்பிள்ளை இவர்தான்!
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. அந்த சமயத்தில் மாமன்னன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்திலும் நடித்துவருகிறார்.
திருமணம்?
இந்நிலையில், கேரளாவில் ஃபேமஸான நகைக்கடை முதலாளி ஒருவரின் மகனை கீர்த்தி காதலித்துவருவதாகவும்; இருவரும் 13 வருடங்களாக பழகிவருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், விரைவில் இரு்வரும் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil