பதறியடித்து காருக்குள் ஓடிய கீர்த்தி சுரேஷ்; என்ன காரணம் - வைரலாகும் வீடியோ!

Keerthy Suresh Tamil Cinema Viral Video
By Sumathi Apr 01, 2023 07:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் துள்ளி குதித்து ஓடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பதறியடித்து காருக்குள் ஓடிய கீர்த்தி சுரேஷ்; என்ன காரணம் - வைரலாகும் வீடியோ! | Keerthi Suresh Happy Jumping Viral Video

தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ மூலம் அறிமுகமானார். அதனையடுத்து, விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

வைரல் வீடியோ

அதனைத் தொடர்ந்து, நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள தசரா நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்நிலையில், படம் வெற்றியடைந்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் உச்சகட்ட மகிழ்ச்சியில் கதாபாத்திரமான வெண்ணிலாவாக துள்ளி குதித்து ஓடும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியாவில் மட்டுமே முதல் நாளில் இப்படம் 38 கோடிகளை அள்ளியுள்ளது.