கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாய்வு நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

MK Stalin Inspection Keeladi
By Thahir Oct 29, 2021 10:52 AM GMT
Report

கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாய்வு நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாய்வு நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாய்வு அண்மையில் நிறைவு பெற்றது.அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்க்கை முறையை உணர்த்தும் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூ.12 கோடியே 21 லட்சம் ஒதுக்கிடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அங்க நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அவர் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.