மண்ணோட கலந்தாலும் அதுதான் நம் அடையாளம்... கொந்தகையில் அகழாய்வு பணிகள் தீவிரம்!
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில்அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடபெற்று வருகிறது.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்டமுதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13 ந தேதி முதல் தொடங்கி நடந்து வருகின்றன.
தொல்லியல் இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், காவ்யா, அஜய் ஆகியோர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழடியில் கணேசன் என்பவரது நிலத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு மூடியுடன் கூடிய பானை, கத்தி போன்ற ஆயுதம், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
கொந்தகையில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 15 முதுமக்கள் தாழிகளும் பத்து சமதள மனித எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன
மூன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் நான்காவதாக உள்ள தாழியை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் பழந்தமிழர்கள் பொருட்கள் வெளிவருவதன் மூலம் தமிழ் நாகரித்தின் பெருமை உலகமெங்கும் பரவும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.