கீழடி அகழாய்வில் சிவப்பு வண்ண கொள்கலன் கண்டுபிடிப்பு

keeladi excavation
By Irumporai Aug 28, 2021 11:35 AM GMT
Report

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வு பணியின் போது சிவப்பு வண்ண கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு ஏற்கனவே நடைபெற்ற ஆய்வு பணிகளின்போது உறை கிணறுகள், பானைகள், காதணி, சதுரங்க காய்கள், வட்ட சில்லுகள், விளையாட்டு பொருட்கள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் பொருட்கள் என 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த அகழாய்வு பணியின் போது அடர் சிவப்பு நிறத்திலான பானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பானை 36 செ.மீ வெளிப்புறமும், 30 செ.மீ உட்புற விட்டமும் கொண்டதாக உள்ளது என கூறப்படுகிறது. இவை அக்காலத்தில் தானியங்கள் சேமிப்பதற்காக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது