அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம் : கீழடி, அகரம் அகழாய்வில் இதுவரை 16 உறைகிணறுகள் கண்டுபிடிப்பு
கீழடி அகழாய்வில் இதுவரை 16 உறைகிணறுகள் கண்டறியப்பட்டு்ள்ள நிலையில், வீடுகள்தோறும் உறைகிணறுகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வு இந்த மாத்த்துடன் முடிவடைய இருக்கிறது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகளில் கீழடி மற்றும் அகரத்தில் மட்டும் இதுவரை 16 உறைகிணறுகள் கண்டறியப்பட்டன. இதில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய 32 அடுக்குகளை கொண்ட உறைகிணறு 6ம் கட்ட அகழாய்வில் கீழடியில் கண்டறியப்பட்டது.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அகழாய்வில் உறைகிணறுகள் கண்டறியப்பட்டதால் வீடுகள்தோறும் உறைகிணறுகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதப்படுகிறது.
6 ம் கட்ட அகழாய்வில் உறைகிணறுகளின் அருகில் சிறிய பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய அகழாய்விலும் உறைகிணறுகளைவிட்டு சற்று தள்ளி சிறிய பானைகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் தண்ணீரை பாதுகாப்புடன் அருந்துவதற்கு வசதியாக உறைகிணறுகளை பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
கீழடி, அகரம் உள்ளிட்டவைகள் வைகை நதிக்கரையோரம் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இதனால் அங்கு வணிகம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் வணிகர்களுக்காக குடில்கள், உறைகிணறுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.