கேதார்நாத் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 3 பேர் பலி...!

Chennai Viral Video India Accident
By Nandhini Oct 18, 2022 10:54 AM GMT
Report

கேதார்நாத்க்கு புறப்பட்டுச்சென்ற போது ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து

கேதார்நாத்திலிருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும், பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர்கள் என்று உத்தரகாண்ட் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

kedarnath-helicopter-accident