பெண்களிடம் சில்மிஷம்.. பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராகவன் ராஜினாமா

bjptamilnadu KTRaghavan
By Irumporai Aug 24, 2021 07:02 AM GMT
Report

ஆபாசா வீடியோ வெளியான விவகாரத்தில் தற்போது சிக்கியுள்ள பாஜக பொதுச் செயலாளர் கேடி. ராகவன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன், பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சம்மதத்துடன் தான் இந்த வீடியோ வெளியிடுவதாக குறிப்பிட்ட அவர் பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதில் கேடி ராகவன் பெண் நிர்வாகிகளிடம் தவறான செயலில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியானது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக கேடி.ராகவன் அறிவித்துள்ளார்,

இது குறித்து கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும் என கூறியுள்ளார். மேலும் என்னை சார்ந்தவர்களுக்கு நான் யார் என்று தெரியும், நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன், இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்.

நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். அதே சமயம் எனது குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.