இடுப்பு எலும்பு முறிவு..! தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR மருத்துவமனையில் அனுமதி !!

Telangana Rashtra Samithi Telangana
By Karthick Dec 08, 2023 06:09 AM GMT
Report

பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்திரசேகர ராவ்

தெலுங்கானா மாநிலத்திற்கு இரண்டு முறை முதல்வராக இருந்தவர் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ். நடைபெற்று முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி 39 இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

kcr-admitted-in-hospital-due-to-bone-fracture

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்றிரவு எர்ரவல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எலும்பு முறிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

kcr-admitted-in-hospital-due-to-bone-fracture

69 வயதான அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றார். அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள அவருக்கு பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் சந்திரசேகர ராவ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் ஸ்ரீ கே.சி.ஆர் கருவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற பிரார்த்திக்கிறேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.