Sunday, Jul 13, 2025

மேடையிலேயே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன மாதவன் - அதிர்ந்த பிரபல நடிகை!

Madhavan Tamil Cinema
By Sumathi a year ago
Report

மாதவன் நடிகை காவ்யா மாதவனிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் எனக் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை காவ்யா மாதவன்

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் விழா மேடையில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த விழாவில் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

madhavan - kavya madhavan

கடாமா படத்தில் நடித்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதினை நடிகர் மாதவன் வழங்கினார். அப்போது பேசிய காவ்யா மாதவன், நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் அது. அப்போது நீங்கள் (மாதவன்) டாப் நடிகராக இருந்தீர்கள். நாங்கள் படபிடிப்புக்காக ஊட்டிக்கு வந்திருந்தோம்.

அந்த நடிகையைத் தான் திருமணம் செய்ய விரும்பினேன் - பல வருடங்களுக்குப்பின் மனம் திறந்த மாதவன்!

அந்த நடிகையைத் தான் திருமணம் செய்ய விரும்பினேன் - பல வருடங்களுக்குப்பின் மனம் திறந்த மாதவன்!

மாதவன் கலகல..

அங்கு இருந்த மக்கள், சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் என அனைவரும் என்னை வந்து பார்த்துச் சென்றனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. அதன் பின்னர்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. என்னுடன் இருக்கும் நடிகர் ஜெயசூர்யா, அவர்தான் அந்த படத்தின் கதாநாயகனும்.

அவர் ஊட்டியில் உள்ள மக்களிடம் நான் தான் நடிகர் மாதவனின் மனைவி எனக் கூறியுள்ளார். அப்போதுதான் எனக்கு எல்லாம் தெரியவந்தது என்றார். இதனை சிரித்தப்படி கேட்டுக்கொண்ட மாதவன் உடனே நோ ப்ராப்ளம் என்றார்.

மேலும், நடித்த முதல் படத்தில் ஒரு டயலாக் பேசினேன். அது என்னவென்றால், " அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்பதுதான் எனக் கூறினார். இதைக் கேட்டதும் நடிகை காவ்யா மாதவன் தலையில் கை வைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.