பண்ணை வீட்டில் மதுபான பார்ட்டி - சிக்கிய நடிகை!

Actor Kavitha Shree Drinks Party
By Thahir Jul 20, 2021 06:21 AM GMT
Report

பண்ணை வீட்டில் கொரோனா விதிகளை மீறி மதுபான பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பண்ணை வீட்டில் மதுபான பார்ட்டி - சிக்கிய நடிகை! | Kavithashree Actor

கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் ‘சுகுணா கார்டன்’ என்ற பண்ணை வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதியை மீறி பார்ட்டி நடைபெற்றுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இளம்பெண்களுடன் மதுபோதையில் ஆடியுள்ளனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் மது விருந்தும், ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் சினிமா ஷூட்டிங் நடத்தும் பண்ணை வீட்டை, ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து மது விருந்து நடத்தியதுடன், 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர்.

இதற்காக தலா ரூ.5,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.