வைரல் Marriage Photos...காதலியை கரம் பிடித்தார் கவின்
தமிழ் திரைப்பட நடிகர் கவின் - மோனிகா டேவிட் இருவரின் திருமண இன்று நடைபெற்ற நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் கவின்
விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த கவின், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைய அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரத்துவங்கின.

இவரின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்ட நிலையிலும், நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெளியான, டாடா படம் கவினின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இளைய தலைமுறையினரை பெரிதும் ஈர்த்த இந்த படம் நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்றது.
தோழியுடன் திருமணம்
இந்நிலையில், கடந்த மாதம் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட் என்பவரை திருமண செய்யப்போகிறார் என தகவல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இன்று இருவருக்கும் சென்னை தனியார் ஹோட்டலில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil