முன்னாள் காதலியின் தோழியை உஷார் செய்த கவின்? இது புதுசா இருக்கே - புகைப்படம் வைரல்!
நடிகர் கவினின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவின் திருமணம்
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்தது வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கலந்து கொண்டனர். அங்கு இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதை வெளியில் பொய் பேசிக்கொள்வோம் என்று முடிவெடுத்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் கவினுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.
கவினின் நீண்ட கால தோழியான மோனிகா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் முன்னாள் காதலியான லாஸ்லியாவை சமூக வலைத்தளங்களில் வம்பிழுத்து வந்தனர்
புகைப்படம் வைரல்
இந்நிலையில் கவின் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் மோனிகா முன்னாள் காதலி லாஸ்லியாவின் தோழி என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. மோனிகா லாஸ்லியாவிடம் ஸ்டைலிஸ்டாக பணியாற்றியிருக்கிறாராம்.
இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் இதை கமாண்ட் செய்து வருகிறார்கள். சிலர் கவின்- லாஸ்லியா பிரேக்அப்பிற்கு காரணம் கவினுக்கு மோனிகா மேல் இருந்த காதல் தான் என்று பேசி வருகிறார்கள்.