அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு : காவேரி மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்

By Irumporai Jun 26, 2023 05:52 AM GMT
Report

அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்த முக்கியத்தகவலை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் அமைச்சர்

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனி அறையில் 20 நாட்கள் தங்கி இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி தற்போது நல்ல நிலையில் தேறி வருகிறார் என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு : காவேரி மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல் | Kavery Hospital Says About Senthil Balaji Health

மேலும் செந்தில் பாலாஜியால் தற்போது மெல்ல பேச முடிகிறது என்றும் இன்னும் எழுந்து இயல்பாக நடக்கவில்லை என்றும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

ஒய்வு தேவை 

அதே சமயம்  நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரது தம்பி அசோக் உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை என்றும் இன்னும் சில நாட்கள் அவர் முழு ஓய்வுடன் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.