காவிரி விவகாரம்....ஸ்தம்பித்த பெங்களூரு..நகர் முழுவதும் 144 தடை உத்தரவு
காவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ள காரணத்தால், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனை
காவிரி பிரச்சனை தமிழக - கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு குறைவான மழை பெய்துள்ளதால் கர்நாடக தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஸ்தம்பித்த பெங்களூரு
உச்சநீதிமன்றமும் இந்த தீர்ப்பை மீண்டும் உறுதி செய்த போதிலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த உத்தவிற்கு எதிராக இன்று பெங்களூரில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.முன்னெச்சரிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க பெங்களூரில் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியான பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.