சீக்கிரமே நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வீடு திரும்புவார் - காவேரி மருத்துவமனை அறிக்கை
கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், நேற்று தனது மகள் சௌந்தர்யா உருவாக்கியிருக்கும் `ஹூட்' செயலியில் தனது அண்ணாத்த திரைப்படம் குறித்து ஆடியோ பதிவு ஒன்று பகிர்ந்திருந்தார். ரஜினியின் அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரஜினி ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ரஜினிகாந்தின் மனைவி லதா வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காகத் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார். எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது