ஆட்டத்தை மாற்றிய கௌசல் தாம்பேவின் ஒற்றை கேட்ச் - இந்தியா உலகக்கோப்பையை வென்றதன் பின்னணி
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கௌசல் தாம்பே அசத்தலான கேட்ச் பிடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்களை சேர்த்து 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதனிடையே இங்கிலாந்து அணி பேட் செய்த போது ஒரு கட்டத்தில் 47 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி வீரர் ஜேம்ஸ் ரூஸ் 95 ரன்கள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து கௌரவமான ஸ்கோரை எட்டியது. இதில் 95 ரன்களில் ஜேம்ஸ் ரூஸ் விளையாடிக் கொண்டிருந்த போது ரவிகுமார் பந்து வீச்சை இடது பக்க பவுண்டரி லைனை நோக்கி அடித்தார்.
பந்து சிக்ஸ் போகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நேராக அங்கு பீல்டிங் செய்துக் கொண்டிருந்த இந்திய வீரர் கௌசல் தாம்பே கைக்கு சென்றது. வந்த எளிய கேட்சை முதலில் கோட்டை விட்டு பின் அற்புதமான டைவ் மூலமாக கௌசல் தாம்பே பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What a recovery of a catch !!! #BCCI #Cricket #INDvENG #U19CWC #U19CWCFinal pic.twitter.com/qMoZbShQrr
— Interstellar (@chouhaan) February 5, 2022