அடாவடி செய்த அருள் வாக்கு அம்மா - களி திண்ண வைத்த போலீசார்
தமிழகத்தில் புதுசு புதுசா தினுசு தினுசா தோன்றும் சாமியார்களின் எண்ணிக்கை என்பது நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
அருள் வாக்கு அம்மானின் அட்ராசிட்டி
அந்த வகையில், கடந்த ஆண்டு பெரிதளவில் மக்களிடம் பேசப்பட்டவர் அன்னப்பூரணி கண்ணைப் பறிக்கும் விலை உயர்ந்த பட்டு சேலையில் பக்தர்களுக்கு வைப்ரேசன் மோடில் ஆசி வழங்கி வந்தார்.
இதே போல தலையில் கொண்டை, கொண்டை நிறைய மல்லிப் பூ, நெற்றியில் வட்ட குங்கும பொட்டுடன் கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு கலகலவென வலம் வரும் இந்த அம்மணி தான் அருள் வாக்கு அம்மா என்று அழைக்கப்படும் கீதா.
தன்னுடைய சீடர்களையும் தன்னிடம் அருவாக்கு பெற வருபவர்களையும் செல்லமாக செல்லப்பிள்ளை என்று அழைத்து வரும் இந்த அம்மணியிடம் ஒரு இளைஞர் பட்டாளமே சேவை செய்து வருகிறது.
இந்த அம்மணியோ தனக்கென்று யூடியூப் சேனல் ஒன்றை வைத்துக் கொண்டு தன்னிடம் அருள் வாக்கு வாங்க வரும் குடும்பத்தினர் மற்றும் தன்னுடைய நிகழ்வுகளை தன் பக்தர்களுக்கு வீடியோவாக கொடுத்து ஆதரவு அலையை அதிகரித்து வருகிறார்.
களி திண்ண வைத்த போலீசார்
இதை நம்பி பின் செல்லும் இளைஞர்களோ...நீ சொன்ன மட்டும் போதும் எல்லாரும் ஓடி வருவாங்க என்று கூறி அம்மணி அருள் வாக்கு அம்மாவை மெய்சிலிர்க்க வைக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி இவருக்கு கேரளாவிலும் பக்தர்கள் இருந்து வருகின்றனர்.
அம்மணி அருள்வாக்கு அம்மா கீதாவை தேடி வரும் பெண்கள் மற்றும் ஆண்கள் பணம்,நகை, மற்றும் சேலைகள் உள்ளிடவற்றை கடவுள் மீது உள்ள நம்பிக்கையில் அவருக்கு பரிசாக கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இளைஞரை கடத்திய வழக்கில் அருள் வாக்கு அம்மா கைது செய்யப்பட்டு சிறையில் களித்திண்ண வைத்துள்ளனர் போலீசார்.