கத்ரீனா கைஃப்-விக்கி கவுஷல் திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா?

ott platform katrina kaif vicky kaushal ties knot marriage video sold for 100cr
By Swetha Subash Dec 12, 2021 11:04 AM GMT
Report

இந்தி பட உலகின் பிரபல காதல் ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் திருமண வீடியோவை ஒளிப்பரப்ப 100 கோடி ரூபாய் ஓடிடி ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003ஆம் ஆண்டு ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் கத்ரீனா கைப் மற்றும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலுக்கும் இடையில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

கத்ரீனா கைஃப்-விக்கி கவுஷல் திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? | Katrina Kaif Vicky Kaushal Ties Knot Ott Video

இவர்களின் திருமணம் கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ்சென்ஸ் என்ற கோட்டையில் நடைபெற்றது.

கத்ரீனா கைஃப்-விக்கி கவுஷல் திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? | Katrina Kaif Vicky Kaushal Ties Knot Ott Video

இந்தத் திருமணத்துக்காக கோடிக்கணக்கான செலவில் அலங்கார ஏற்பாடுகள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள திரையுலகப் பிரபலங்கள், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், இவர்களின் திருமணத்தைப் பதிவு செய்து வெளியிட அமோசான் ஓடிடி தளம் 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்ரீனா கைஃப்-விக்கி கவுஷல் திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? | Katrina Kaif Vicky Kaushal Ties Knot Ott Video

இது சம்பந்தமாக ஓடிடி தளங்களுக்குப் படங்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யும் முகவர்களிடம் பேசியபோது,

“இது அதிகாரபூர்வமான செய்தியல்ல. அதிலும் ஒரு நடிகையின் திருமணத்தை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய அளவு அதன்மூலம் வருமானம் கிடைக்காது.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையே 100 கோடிக்கு விற்க முடியாத சூழலில் ஒரு திருமண நிகழ்ச்சியை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவார்களா என்பதை ஊடகங்களும் ஆய்வுக்கு உட்பட்டுத்துவதில்லை. அதனால் இப்படிப்பட்ட செய்திகள் பரவுகின்றன என்றனர்.