காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷல் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்
பாலிவுட் காதல் ஜோடி கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப்பும், முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்கி கௌஷலும் காதலிப்பதாகவும். விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் செய்திகள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் இன்று அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் உள்பட 120 பேர் கலந்து கொண்டார்கள்.
கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சம் ஆகும். ஆனால் கத்ரீனாவின் திருமணத்திற்கு Six Senses Fort Barwara ரிசார்ட் வாடகை எதுவும் வாங்காமல் இலவசமாக இடத்தை கொடுத்திருந்தது.
மேலும் கத்ரீனா, விக்கியின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
அதில்’இந்த தருணத்திற்கு எங்களை கொண்டு வந்த அனைத்திற்கும் எங்கள் இதயங்களில் அன்பும் நன்றியும் மட்டுமே. இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தேடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேசமயம் விரைவில் திரையுலக நண்பர்களுக்காக திருமண வரவேற்பு விழாவும் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.