கத்ரீனா கைஃப், கணவர் விக்கி கெளஷலுக்கு மர்ம நபரால் தொடர் கொலை மிரட்டல்!
பாலிவுட் பிரபல தம்பதியான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்ரீனா கைஃப்
பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003ஆம் ஆண்டு ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் கத்ரீனா கைப் மற்றும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலுக்கும் இடையில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ்சென்ஸ் என்ற கோட்டையில் நடைபெற்றது.
கொலை மிரட்டல்
இந்தத் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள திரையுலகப் பிரபலங்கள், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளசலுக்கு சமூக வலைதளம் வாயிலாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
இது குறித்து மும்பை சாண்டகுரூஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கு பதிவு
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அந்த நபர், கத்ரீனா கைப்பிற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறினர்.
மேலும், சாண்டகுரூஸ் காவல்துறை அடையாளம் தெரியாத நபரின் மீது சட்டப்பிரிவு 506, 354 -D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.