கத்ரீனாவுக்கு நான் சரியான கணவர் இல்லை... மனம் திறந்த விக்கி கௌஷல்... ஷாக்கான ரசிகர்கள்..!

Katrina Kaif
By Nandhini 1 மாதம் முன்
Report

கத்ரீனாவுக்கு நான் சரியான கணவர் இல்லை என்று கணவர் விக்கி கௌஷல் மனம் திறந்து பேசியுள்ளார்.

கத்ரீனா கைஃப்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் 2003ம் ஆண்டு ‘இந்தி’ திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். இதனையடுத்து, பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்

கடந்த ஆண்டு, கத்ரீனா கைப் மற்றும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலை காதல் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ்சென்ஸ் என்ற கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது.

katrina-kaif-vicky-kaushal

மனம் திறந்த விக்கி கௌஷல்

சமீபத்தில் ஒரு நேர்காணலில், விக்கி கௌஷல் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், நான் என் மனைவியை நேசிக்கிறேன். காதலில் இருப்பவர் எப்போதும் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக இருக்கிறார். அவரால் இருக்கக்கூடிய ஒரு கணவரின் சிறந்த பதிப்பாக இருக்க முயற்சிக்கிறேன்'. ​​

நான் எந்த வகையிலும் சரியானவன் அல்ல. கணவனாகவோ, மகனாகவோ, நண்பனாகவோ, நடிகனாகவோ அல்ல. அதுவே நடந்துகொண்டிருக்கும் தேடல் மற்றும் அதை அடைவதற்கான செயல்முறை என்று நான் நினைக்கிறேன்.

நான் ஒரு சரியான கணவர் என்றோ, நான் எந்த வகையிலும் சரியானவன் என்றோ நான் நினைக்கவில்லை, ஆனால் எந்த நேரத்திலும் என்னால் இருக்கக்கூடிய ஒரு கணவரின் சிறந்த பதிப்பாக இருக்க முயற்சிக்கிறேன். நிச்சயமாக, நாளை நான் நேற்றை விட நன்றாக இருப்பேன், ஆனால் நான் எப்போதும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன் என்றார். 


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.