10வது முறையாக காட்பாடியில் களமிறங்கும் துரைமுருகன்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான துரைமுருகன் 10வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இந்நிலையில் தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளன, இதில் காட்பாடி தொகுதியில் துணைப் பொதுச்செயலாளரான துரைமுருகன் போட்டியிடுகிறார்.
அதாவது 10வது முறையாக காட்பாடி தொகுதியில் களமிறங்குகிறார், 11 முறை சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டவர் துரைமுருகன்.
ஏற்கெனவே 9 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.