வெளியானது காத்து வாக்குல ரெண்டு காதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

Nayanthara Samantha Actor vijaysethupathi Kaathuvakkularendukadhal
By Petchi Avudaiappan Nov 15, 2021 07:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளியானது காத்து வாக்குல ரெண்டு காதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | Kathuvakkularendukadhal First Look Poster Released

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் கூடிய அந்த போஸ்டரில், அவரது கதாபாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் ‘ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஒஹூந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகவும், இந்த பெயரை சுருக்கமாக ‘ரேம்போ’ என அழைக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.