நடிகர் மம்மூட்டி ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்; ஜோதிகா விவாகரத்திற்கு தயார் - என்ன நடந்தது?
கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் காதல் தி கோர் வெளியிட தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல் தி கோர்
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்த திரைப்படம் மலையாள திரைப்படம் 'காதல் தி கோர்' (Kaathal – The Core). தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா இப்படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. மேலும், வரும் 23ம் தேதி திரையரங்குகளில் 'காதல் தி கோர்' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மம்முட்டி ரிட்டெயர் ஆனதும், ஏரியா பஞ்சாயத்து போர்ட் தேர்தலில் நிற்க நாமினேஷன் தாக்கல் செய்கிறார். அதே நேரத்தில் ஜோதிகாவுக்கு, தன் கணவர் தான் பாலின ஈர்ப்பாளர் என விவாகரத்திற்கு சமர்பிக்க, அதற்கு பிறகு நடக்கும் சுவாரஸ்யமே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
வெளியிட தடை
இந்நிலையில், ஓரின சேர்க்கை உறவை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் இருப்பதால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி ஓரின சேர்கையாளராக இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல் கசிந்தது. இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போதுவரை இது தொடர்பாக படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.