“கட்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோள்” - சட்டப்பேரவையில் தகவல்

katchatheevu mkstalin tnpolitics tnassembly2022
By Swetha Subash Apr 13, 2022 08:13 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை இன்று கூடி அதில் கால்நடை, மீன்வளம், பால்வளம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 4 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, “கட்சத்தீவை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பாகிஸ்தான் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமை மீட்கப்பட வேண்டும்” என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.