தோத்த காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல : ஆண்டவர் பாட்டு.. கஸ்தூரி விமர்சனம்

Kamal Haasan Kasthuri Vikram Movie
By Irumporai May 12, 2022 10:11 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்ரம் படத்தை காண ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் நேற்று வெளியானது. நீண்ட் நாட்களுக்கு பிறகு , நகமல்ஹாசன் தான் நடித்துள்ள விக்ரம் படத்தில் “பத்தலபத்தல” என்ற ஒரு குத்துப்பாடலை அவரே எழுதி அனிருத் இசையில் கமலே பாடியிருந்தார்.

இந்த பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலில் நிறைய அரசியல் கருத்துக்கள் இடம்பெற்றிருந்த இந்த பாடல் இணையத்தில் வைரலான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவரும் நடிகையும் விமர்சகருமான கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்:

 சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.

கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு” என்று பதிவிட்டுள்ளார் கோயம்புத்தூரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியுற்றதை குறிப்பிட்டு தான் கமல் இப்படி எழுதியுள்ளார் என்று கஸ்தூரி தெரிவித்துள்ள கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.