எனக்கு கூட வீடியோ ரிலீஸ் பண்ணுவாங்க விஜி...விளாசிய கஸ்தூரி..!!

Kasthuri Vijayalakshmi Tamil Cinema Seeman Tamil Actress
By Karthick Sep 12, 2023 02:00 PM GMT
Report

சீமான் விஜயலக்ஷ்மி விவகாரத்தில் நடிகை கஸ்தூரி, 3 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு தற்போது சீமான் மீது குற்றம் சொல்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரி பேட்டி

இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காதலிக்கும் பொழுது நன்றாக காதலித்து விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த காதலில் முறிவு ஏற்படும் போது, அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி காவல்நிலைய படியேறுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என தெரிவித்தார்.

kasthuri-slams-vijayalakshmi-in-seeman-issue

அதே நேரம், அந்த உறவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாலோ அல்லது கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறான் என்றாலோ நீங்கள் அது குறித்து புகார் அளிக்கலாம் என சுட்டிக்காட்டிய கஸ்தூரி, மூன்று வருடம் குடும்பம் நடத்தி விட்டு, தற்போது அந்த உறவில் நான் ஏமாந்து விட்டேன் என்று சொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை என விஜயலட்சுமியை விமர்சித்துள்ளார்.

10 வருடங்கள் கழித்து ஏன்..?

இந்த விஷயத்தில் அவர் நீதி கேட்டோ, பெண்ணுரிமை பக்கம் நின்றோ கேள்வி கேட்டது போல தனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டு, அவர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு சீமான் என்னை ஏமாற்றிவிட்டார் என்பது தான் என்றும் அப்படியே ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்திருந்தாலும் கூட அதை பத்து வருடங்கள் கழித்து தூசி தட்டுவது ஏன் என வினவினார்.

kasthuri-slams-vijayalakshmi-in-seeman-issue

அரசு சீமானை கைது செய்ய தற்போது லட்சுமியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகத்தை தனக்கு வருவதாக கூறிய கஸ்தூரி, தன்னை பொறுத்தவரை இது ஒரு பழிவாங்கும் முயற்சியே என்றும் தெரிவித்திருக்கிறார்.