பயில்வான் ரங்கநாதனை விளாசிய கஸ்தூரி - சகட்டுமேனிக்கு திட்டி தீர்க்கும் ட்விட்டர் பதிவு

bayilvanranganathan actresskasthruri
By Petchi Avudaiappan Feb 10, 2022 12:19 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை சகட்டுமேனிக்கு திட்டித்தீர்த்து ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகரும்,பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் குறித்தும் பல நடிகைகள் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தி =ல் தனுஷ்,ஐஸ்வர்யாக பிரிவு குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இருவர் மீது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்தால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.


இதனிடையே புதிதாக பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து டென்ஷனான கஸ்தூரி, அவர் மீது வழக்கு தொடர பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர்களின் ஆதரவை நாடியுள்ளார். 

அந்த வீடியோவில் லட்சுமி ராமகிருஷ்ணன்,கஸ்தூரி, ஓவியா மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதனை சரமாரியாக விளாசியுள்ளார். 

கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் அசிங்கத்தை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். வழக்கு வரும், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர், நடிகையின் ஆதரவை கோருவதாக பதிவிட்டுள்ளார்.