‘என்னப்பா இப்படி சொல்லிட்ட’ - தனுஷ் மீது கோபத்தில் இருக்கும் தந்தை கஸ்தூரி ராஜா?

dhanush aishwaryadhanush kasthuriraja aishwaryarajinikanth payani
By Petchi Avudaiappan Mar 18, 2022 12:35 AM GMT
Report

இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கியுள்ள முசாஃபிர் ஆல்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ் மீது அவரது தந்தை கஸ்தூரி ராஜா கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் நேற்றுமாலை வெளியானது. இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.

இதனை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது பதிவில், பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா ‘தேங்க்ஸ் தனுஷ்....தெய்வீகம் உண்டாகட்டும்’ என தெரிவித்தார். 

ஆனால் முறைப்படி விவாகரத்து ஆகாத நிலையில் மனைவியை நண்பர் என குறிப்பிட்ட தனுஷின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும்  கிளம்பியுள்ளது. குறிப்பாக தனுஷ் - ஐஸ்வர்யா இணைப்பு விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.