தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? தந்தை கஸ்தூரி ராஜா பதில்

Dhanush Kasthuri Raja
By Karthikraja May 31, 2026 01:36 PM GMT
Report

தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?

சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா கலந்துகொண்டார். 

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? தந்தை கஸ்தூரி ராஜா பதில் | Kasthuri Raja About Dhanush Political Entry

இதில் பேசிய அவரிடம் போயஸ் கார்டனுக்கும் அரசியலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கு. சென்னையில் பவர்புல்லான இடம். நிறைய அரசியல் பிறந்திருக்கு. உங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வருவார்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம்தான். கோபாலபுரம் இன்னும் அங்குதான் உள்ளது. கலைஞர் வாழ்ந்த இடம், ஒளி பிறந்த இடம். இளையதளபதியும் அங்கு வரப்போகிறார்கள் என சொல்கிறார்கள். வரட்டும், நமக்கு அரசியல் வேண்டாம்.

எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். வேண்டாம்னு சொல்ல நம்ம யாரு? நம்ம வர முடியாது வயசு போயிடுச்சு. எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம்" என கூறினார்.

தனுஷ் அரசியலுக்கு வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு அது எனக்கு தெரியாது, நான் சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளார்.