தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? : பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய நயன்

Nayanthara Vignesh Shivan
By Irumporai Oct 10, 2022 03:52 AM GMT
Report

திருமணமான நான்கே மாதத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது விக்னேஷ் சிவன்  நயன்தாரா ஜோடி.

நயன் விக்கி திருமணம்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இடையே இவர்கள் இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இவ்வாறு சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பிரபலங்கள் புடைசூழ பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? : பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய நயன் | Kasthuri Nayanthara Vignesh Shivan Twin Babies

இந்நிலையில், திருமணமான நான்கே மாதத்தில், தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது இந்த ஜோடி. நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என ஏராளமானோர் கேள்வி எழுப்பி வந்தனர்.

நான்கே மாதத்தில் குழந்தை

அதற்கு அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி நயன்தாரா ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? : பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய நயன் | Kasthuri Nayanthara Vignesh Shivan Twin Babies

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் : மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

கஸ்தூரி கேள்வி

தடையை மீறினாரா லேடி சூப்பர்ஸ்டார்? : பிரபல நடிகையின் ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய நயன் | Kasthuri Nayanthara Vignesh Shivan Twin Babies

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டுள்ளார்.

இதனால் நடிகை நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைபாடுகள் உள்ளதா? என்கிற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது .