காஷ்மீர் பனிப்பொழிவு இயற்கை பேரழிவாக அறிவிப்பு
kasmir-army-pakistan-india-bomb
By Jon
காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவை இயற்கை பேரழிவாக அறிவித்தார் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிபொழிவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பனிப்பொழிவால் பாதிக்கப்படும் மக்களுக்கு, ஜம்முகாஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் நிதியுதவி போன்றவை இனி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.