பாகிஸ்தானுக்கு உளவு வேலைப் பார்த்த உளவாளி கைது

kasmir-army-pakistan-india-bomb
By Jon Jan 11, 2021 01:25 PM GMT
Report

பாகிஸ்தான் நாட்டிடம் சொந்த நாட்டைக் காட்டி கொடுத்த 42 வயது நபரைப் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் ஜெய்சால்மர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயண் பாலிவால் (வயது 42).

பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை அவரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சி.ஐ.டி. போலீசார் (சிறப்பு பிரிவு) அவரை நாட்டுக்கு எதிராக உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஏஜெண்டுடன் தொடர்புப்படுத்தி கொண்டதும், நாட்டின் ராணுவம் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்ததும், அவற்றை ஏஜெண்டிடம் பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.