2019- இந்தியா நடத்திய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானார்கள் - முதன் முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
பால்கோட்டில் 2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் பலியானதை பாகிஸ்தான் முதன் முதலாக ஒப்புக்கொண்டது. காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நமது துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் இதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியஇந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புல்வாமா தாக்குதல் நடத்திய 12 நாள் அதாவது பிப்ரவரி 26, 2019 இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இது பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக அமைந்தது.இந்த சம்பவத்திற்கு இது வரை உயிர்ப்பலியினை ஒப்புக்கொள்ளாமல் இருந்த பாகிஸ்தான் தற்போது வாய் திறந்துள்ளது.
பாகிஸ்தானின் தனியார் சேனல் ஒன்றில் பேசிய அந்த நாட்டின் ஓய்வுபெற்ற தூதரக அதிகாரி ஆகா ஹிலாலி இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலில் சுமார் 300 பேர் பலியானார்கள்என அவர் கூறினார்.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி பலி விவரத்தை வெளியிட்டுள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை கிளப்பியுள்ளது.